கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 44 பேரில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள்…!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 44 பேரில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும், ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுமாவர் என்பதால் தடுப்பூசகளை முன்வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை 5877 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களில் 443பேர் இதுவரை தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். இறந்தவர்களில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும், ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுமாக உள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக தொற்றாளர் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டது. தினமும் 500 தொடக்கம் 600க்கு மேற்பட்டவர்களிற்கு பரிசோதிக்கப்பட்டவர்களிற்கு 250 பேர்வரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள். இந்த வாரம் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது.
சென்ற வாரம் தொற்றாளர் எண்ணிக்கை 150க்கு கீழாக காணப்பட்டது. இந்தவாரம் தொற்று மேலும் குறையும் என எதிர்பார்க்கின்றோம்.மக்களின் ஒத்துழைப்பே பிரச்சினையாக உள்ளது. நாடு முடக்கப்பட்டிருந்தாலும், மக்களிற்கு வெளியே செல்வதற்கு சில அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் துஸ்பிரயோகம் செய்வதாக உணர முடிகின்றது. வழங்கப்படும் அனுமதியை பயன்படுத்தி தேவையற்று நடமாடுகின்றனர். மாஸ்க் அணிந்திருந்தாலும் இடைவெளியை பேணாததை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நடைமுறை தொடருமாயின் எதிர்வரும் வரும் நாட்டிகளில் மீண்டும் தொற்று அதிகரிப்பதற்கான ஆபத்து உள்ளது. இ்த முடக்கம் அதிகரித்தல் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால்  மீண்டும் இந்த தொற்று அதிகரிக்கும்.
ஆகவே மக்கள் தேவையற்ற விதத்திலே வீதியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அதேவேளை வீடுகளில் தேவையற்ற நிழ்வுகளையும் தவிர்க்க வேண்டும். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்டவை அயல் வீடுகளுடன் இணைந்து நடார்த்துவதை  அவதானிக்க முடிகின்றது. அவற்றை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
தொற்று காணப்படுபவர்களில் அநேகமாக வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுன்றது. அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுளளவர்களிற் கான நோய் அதிகரிப்பு காணப்படுமிடத்து வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
நேற்று முதல் 2ம் கட்ட தடுப்பூசி ஏற்றம் பணிகள் 16 தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் ஏறத்தாழ 9000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்முறை மக்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கிராமங்கள் தோறும் தடுப்பூசி நிலையங்களை அமைத்துள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் தூர இருக்கின்ற கிராமங்களிற்கும் இத்திட்ம் விஸ்தரிக்கப்படும். அதேவேளை அடுத்த வாரம் தொடக்கம் வீடுகள் தோறும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதில் பின்னிக்கின்றார்கள். அவர்கள் அதனை தவிர்த்துக்கொள்ள விரும்புகின்றார்கள். அவ்வாறு உள்ளவர்கள் வீடுகளிற்கு வரும்பொழுது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews