நாணய சுழற்சியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி!

இலங்கை மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பிக்கப்படவிருந்த இந்த போட்டி மழைக்காரணமாக தாமதமடைந்தது.
இந்நிலையில் இப்போட்டி அணிக்கு 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போட்டி மாலை 4 மணிக்கு ஆரம்பமானது.
இலங்கை மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews