உள்ளூராட்சி தேர்தலுக்கான அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!

உள்ளூராட்சி தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி நடத்துவதற்கான அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் நேற்று 01/02/2923 வெளியிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 38(1)(c) துணைப்பிரிவின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவிக்கும் அரசிதழை வெளியிடுகின்றனர்.

இது தொடர்பான அரசிதழ் யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரான மாவட்ட செயலளரினால் வெளியிடப்படவில்லை என அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 59 அரசியல் கட்சிகள்

மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews