இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 4 வது தொடர் கருத்தரங்கு…..!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 4 வது தொடர் அமர்வு  (27 /01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம்  பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்  இடம் பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் முதலாவது அமர்வு  கடந்த மாதம்  (02/12/2022) இரண்டாம் திகதி ஆரம்பமானது. அதனை தொடர்ந்து நேற்று நான்காவது அமர்வாக இனப்பிரச்சினைக்கான தீர்வாக சந்திரிக்காவின்  தீர்வுத் திட்டம தொடர்பான. ஆய்வை  வருகை விருவுரையாளரும் பத்தி எழுத்தாளருமான ஐ.வீ.மகாசேனன்  விரிவுரையாளர் செல்வி ஜஸ்மியா குகதாசன் ஆகியோர் நிகழ்த்தியதுடன் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
தொடர்ந்து அரசறிவியல்துறை தலைவர் பேராசிரியர் கெர.ரீ.கணேசலிங்கம் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததுடன் தொகுப்புரையையும் வழங்கினார். நன்றியுரையினை சிரேஸர விரிவுரையாளர் திருச்செந்தூரன் நிகழத்தினார்.
இதில் ஆரசியல் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளருமான  சி.அ.யோதிலிங்கம், அரசறிவியல் துறை மாணவர்கள், அரசியல் ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews