வவுனியாவில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் ஒரே நாளில் 9 பேர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கல்குண்ணாமடு பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனாத் தொற்று காரணமாக நேற்று மரமணமடைந்துள்ளனர்.

இது தவிர கற்குளம், கோவில்குளம், உக்குளாங்குளம், கரப்பங்காடு, தோணிக்கல், கனகராயன்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45, 71, 71, 53, 62, 60, 76 ஆகிய வயதுகளையுடைய 7 பேர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews