யாழ்.மாவட்டம் உச்ச அபாயத்தில்! மாவட்டத்தில் இதுவரை 224 கொரோனா மரணங்கள் பதிவு, மாகாணத்தில் 327 மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் 224 கொரோனா மரணங்கள் உட்பட வடமாகாணத்தில் சுமார் 327 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 224 பேர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில் ஆரம்பித்த போதும் வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச்சில் யாழ்ப்பாணத்தில் முதலாவது தொற்றாளர் கண்டறியப்பட்டார்.

அன்றிலிருந்து நேற்றுவரையான 17 மாதங்களில் வடக்கு மாகாணத்தில் 23 ஆயிரத்து 36 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 224 பேரும் வவுனியா மாவட்டத்தில் 55 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேரும் முல்லைத்தீவு,

மன்னார் மாவட்டங்களில்தலா 15 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews