நாட்டை மேலும் ஒருவாரம் முடக்க கோரிக்கை, திறப்பதில் அரசு விடாப்பிடி.. |

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம் 30ம் திகதியுடன் தளர்த்தாமல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு சுகாதார பிரிவினர் கோரும் நிலையில் எனினும் 30ம் திகதி ஊரடங்கை தளர்த்துவதில் அரசு தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

அத்தியாவசிய சேவைகளை தொடந்து சில கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது அமுலில் உள்ள பொதுமுடக்கத்துடன் கூடிய ஊரடங்கு வெறுமனே 10 நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருப்பதாலும் ,

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பதாலும் குறைந்தபட்சம் மேலும் ஒருவாரகாலத்திற்காவது முடக்கத்தை தொடரவேண்டுமென மருத்துவ நிபுணர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் முடக்க காலப்பகுதியில் மரணங்கள் மற்றும் நோயாளர் எண்ணிக்கையில் குறைவு ஏற்படவில்லையென அரச உயர்மட்டத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இன்று  வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளதால்

அதில் இந்த விடயங்களை ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்க அரச உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை , நாட்டை தொடர்ந்து முடக்காமல்,ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்குமாறு

அரசின் மூத்த அமைச்சர்கள் பலர் அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு முடிவெடுத்தால் அது மேலும் பாதிப்புகளை தருமென மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews