புத்தசாசன அமைச்சில் பணியாற்றிய மேலும் ஒரு பெரும்பான்மை இனத்தவரே மாவட்டச் செயலாளராக மீண்டும் நியமனம்.. |

புத்தசாசன அமைச்சில் பணியாற்றிவவுனியா மாவட்டச் செயலராக கடமையாற்றிய சமன் பந்துலசேனா மாகாண பிரதம செயலாளராக கடமையேற்றிருக்கும் நிலையில் புதிய மாவட்டச் செயலராக புத்தசாசன அமைச்சில் பணியாற்றிய சரத் சந்திர என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரச அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண பிரதமசெயலாளராக பதவி உயர்வுபெற்றுச்சென்றிருந்தார். இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக தனது பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த சரத்சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன்

இன்றைய தினம் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews