முல்லைத்தீவில் கொரோனாவால் இன்று மட்டும் நால்வர் மரணம்…!

முல்லைத்தீவில் கொரோனா தொற்று காரணமாக இன்று நான்காவதாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று மாலை வரையில் நான்கு மரணங்கள் மாவட்ட மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது கொரோனா தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணிக்கு நான்காவது மரணம் பதிவாகியுள்ளது.
முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியினை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேநாளில் அதிகளவான மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews