யாழில் மேலும் 102 பேர் உட்பட மாகாணத்தில் 144 பேருக்கு தொற்று…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 102 பேர் உட்பட வடக்கில் சுமார் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 737 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 102 பேருக்கு தொற்று.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 29 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 14 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 10 பேர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் 02 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 பேருக்கு தொற்று. 

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர், மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோருடன்இரணைமடு விமானப்படை முகாமில் 07 பேர்,

மன்னார் கடற்படை முகாமில் 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews