தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கிய அங்கஜன்…!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கியிருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கும் போது தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது நாடு பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதில் ஓர் அங்கமாக பொருளாதார பிரச்சனை காணப்படுகிறது.

இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14பேரும் எமது ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானித்தோம்.

அந்தவகையில் யாழ்.மாவட்டத்தில் இருந்து கொவிட் நிதியத்திற்கு பங்களிப்பை ஆற்றிய முதல் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் பெருமிதமடைகிறேன். இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை காரணமாக எத்தனையோ குடும்பங்கள்

வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. அவ்வாறான குடும்பங்களுக்கு அரசாங்கம் இரண்டாயிரம் ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் எனது அன்பளிப்பு நிதியும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள

மற்றும் கொவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பயன்படப்போவதனை இட்டு பெருமகிழ்வடைகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews