தனிமைப்படுத்தல் ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் திரண்ட மக்கள்

ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்கு மக்கள் இன்று படையெடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில வாரங்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மண்ணெண்ணெய் கொள்வனவில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கோவிட் தொற்றின் தீவிர நிலை காரணமாக கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் கொழும்பு – கொட்டாஞ்சேனை எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews