யாழ்.மாவட்டம் பேராபத்தில்! தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது, 200 மரணங்கள் பதிவு, மாவட்ட செயலர் எச்சரிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது சிறந்தது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மாவட்ட மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 10166 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனா மரணங்கள் 200ஆக உயர்ந்திருக்கின்றது. இந்த அதிகரிப்பின் பெரும் பகுதி மே மாதத்தின் பிற்பகுதியில் நடந்ததாககும்.

மேலும் தற்போது தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 130 வரை காணப்படுகின்றது. இது மோசமான அதிகரிப்பாகும். இந்நிலையில் மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களை முடக்கிக் கொண்டு அரசு அறிவித்துள்ள

10 நாட்களில் வீடுகளில் இருப்பது எமது மாவட்டத்தையும், நாட்டையும் மோசமான நிலையிலிருந்து மீட்பதற்கு உதவியாக இருக்கும். அதேவேளை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் வாரியாகவும் தகவல் சேகரிக்கப்பட்டு

அண்ணளவாக 57 ஆயிரம் பேருடைய விபரங்களை அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் எமக்கு கிடைத்தவுடன் நாளைய தினமே அரசாங்கம் அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் உதவி வழங்கும் பணியை எம்மால் தொடங்க முடியும்.

எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது பாதுகாப்பானாது.

Recommended For You

About the Author: Editor Elukainews