இறுதி சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற அரையிறுதி சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இன்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியானது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையில் இலங்கை நேரப்படி 1.30 மணியளவில் ஆரம்பமானது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில்4 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், வெற்றி பெற்ற பாகிஸ்தான் எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ள உலக கிண்ண இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews