பருத்தித் தீவு கடல் அட்டை பண்ணை சட்டவிரோதமானது நெக்டா அதிகாரி….!

யாழ் பருத்தித் தீவில் அமையப்பெற்றுள்ள கடல் அட்டை பண்ணை சட்டவிரோதமானது தான் என நெக்டா நிறுவன வட மாகாண உதவி பணிப்பாளர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் தெரிவித்ததாக யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்தி அலுவலகத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டதாக அன்னராச தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கிராஞ்சி இலவன்குடா மீனவர்கள் மற்றும் ஊர்காவற்துறை மீனவ சங்கப் பிரதிநிதிகள் கடலை அட்டை பண்ணைக்கு எதிராக அன்மையில் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில்கடந்த புதன்கிழமை விசாரணைக்காக முறைபாட்டாளர்களையும் யாழ் கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நெட்டா நிறுவன அதிகாரிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

விசாரணையில் பருத்தித் தீவு கடல் அட்டைப் பண்ண தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வினவியாக போது குறித்த பண்ணைக்கு 2018 ஆம் ஆண்டு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் ஒரு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறித்த அதிகாரி ஆணை குழு முன் தெரிவித்தார்.

ஆகவே சட்டவிரோத கடல் அட்ட பண்ணை தொடர்பில் கொழும்பு மேல் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி நடவடிக்கை எடுப்பது தனக்கு ஒரு வார கால அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டதாக அன்னராசா மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin