இலங்கை அமைச்சரவையில் ஏற்படவுள்ள மேலும் சில திடீர் மாற்றங்கள் –

எதிர்காலத்தில் மேலும் சில அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல அமைச்சரவை அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் துறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில், ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதாரத் துறை அமைச்சராகவும், பவித்ரா போக்குவரத்து அமைச்சராகவும், காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், தினேஸ் குணவர்த்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, நாமல் ராஜபக்சவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews