வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனா…!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

வடமாகாண பிரதம செயலாளருக்கு கடந்த வாரம் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. அதனை அடுத்து அவர் பங்கேற்றிருந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த வடக்கின் உயர் அதிகாரிகள் பலர் சுய தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஒருவரான வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன

Recommended For You

About the Author: Editor Elukainews