யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்.மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மாநகர சபைக்கு உட்பட்ட பலசரக்கு கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது வண்ணார்பண்ணை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் 10 பலசரக்குக் கடைகளில் காலாவதியான பொருட்கள் அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை நல்லூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலும் ஓர் கடையில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வழக்கை விசாரித்த நீதிவான் கடை உரிமையாளர்கள் 11 பேருக்கும் மொத்தமாக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin