விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு! அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தேவையான விமான எரிபொருள் போதுமான அளவில் கையிருப்பில் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் விமான எரிபொருள் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியம் மற்றும் அதன் நடவடிக்கைகளை பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மேலும், விமான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்காக நிரந்தரமான உரிய வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு அமைச்சர் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு தினமும் சுமார் 13 லட்சம் லீட்டர் விமான எரிபொருள் தேவைப்படுகிறது.

அடுத்த மாதத்தில் இருந்து சுற்றுலா காலம் ஆரம்பிக்க உள்ளதால், தினமும் 14 லட்சம் லீட்டர் விமான எரிபொருள் தேவைப்படும்.

விமான எரிபொருளை தடையின்றி தொடர்ந்தும் விநியோகிக்கும் பொறுப்பு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குரியது.

விமான எரிபொருள் வழங்கப்படும் என்ற உறுதிப்பாட்டை விமான நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin