கைவிடப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை -கிளிநொச்சி மாவட்ட செயலர் அதிரடி….!

கைவிடப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைக்காக முன்வரும் விவசாயிகளிற்கு உதவ நடவடிக்கை ஏடுக்கப்படும்  என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், பிரதேச செயலாளர், சமுர்த்தி உதவி ஆணையாளர், நீர்பாசன பொறியியலாளர், விவசாய திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் குறிப்பிடுகையில்,
மாவட்டத்தில் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கைவிடப்பட்ட அல்லது பராமரிப்பற்ற காணிகளில் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளை நாம் வரவேற்கின்றோம்.
அவர்களிற்கு தேவையான விதை தானியம் உள்ளிட்டவற்றை வழங்க சர்வதேச மற்றும் உள்ளுர் நிறுவனங்கள் தயாராக உள்ளன.
எமது மாவட்டத்திற்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு உள்ளுர் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
அதற்காக விவசாவிகள் முன்வர வேண்டும் எனவும், அதற்காக உதவ தயாராக இருப்பதாகவும் மாவட் அரசாங்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews