ஆசிரியர் – அதிபர் போராட்டத்தில் கைதான 44 பேருக்கும் பிணை.!

– 10 வாகனங்களும் விடுவிப்பு

ஆசிரியர் – அதிபர் போராட்ட பேரணியில் பங்கேற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றையதினம் (05) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட  பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நேற்று (04) கைது செய்யப்பட்ட குறித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen சோதனையில் அவர்கள் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்படவில்லையென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 4 வாரமாக ஒன்லைனில் கற்பித்தலிலிருந்து விலகி பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்ள் மற்றும் அதிபர்கள் சங்கத்தினர் நேற்றையதினம் (04) முற்பகல் வெலிசறை, கடவத்த, கொட்டாவ, மொரட்டுவை உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து வாகன பேரணிகள் 4 இன் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.

பின்னர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இரண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதன்போதே குறித்த 44 பேர் கைது செய்யப்பட்டதோடு, 10 வாகனங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

Recommended For You

About the Author: Editor Elukainews