மோசமான தீவிர நிலையை அடைந்தது இலங்கை! அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை –

இலங்கையில் தீவிரமான சுகாதார நெருக்கடி உருவாகி வருவதையும், ஓரிரு வாரங்களில் கோவிட் பாதிப்புக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகவோ அல்லது மும்மடங்காகவோ அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதையும் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து சுகாதார அதிகாரிகள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பிசிஆர், ஆன்டிஜென் சோதனை கருவிகள் மற்றும் ஒட்சிசன் கருவிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டுப்பாடுகள் தளர்த்துவதை மக்கள் தவறாகப் பயன்படுத்துவது பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews