கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள்

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி இதேவேளை தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அப்பகுதியில் பாதுகாப்பு அணைக்கட்டு காணப்படும் நிலையில் அந்த அணைக்கட்டை அகற்றிய போதே குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது.

 

இந்த நிலையில் குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார்.
அதன் அடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன் அகழ்வுப் பணிகள் நாளை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews