மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் தரம்-06 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பெஸ்ட் ஒப் யங் சமூக நிறுவனத்தின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாணவர் மகிமை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் நிறுவனம் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பணிப்பாளர் யூ.எல்.யாக்கூப், அதிபர் ரி.நடேசலிங்கம்,அமைப்பின் செயலாளர் ஏ.புஹாது, சிங்காரபுரி மாரியம்மன் ஆலய தலைவர் ரி.கோபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews