பசில்ராஜபக்ச ! மொட்டு அணியை மீட்பாரா? சி.அ.யோதிலிங்கம்

தற்போதைய அரசிற்கு எதிர் ஜனநாயக முகமும்ரூபவ் இராணுவவாத முகமும் பெருந்தேசியவாத முகமும் உள்ளது. பசில்ராஜபக்ச அதை மாற்றி ஒரு லிபரல்  ஜனநாயக முகத்தைக் கொடுக்க முற்படுகின்றார். ராஜபக்ச சகோதரர்கள் மூவருள்ளும்
லிபரல் முகம் பசிலுக்கு மட்டுமே உண்டு. அமெரிக்கா தலைமையிலான
மேற்குலகத்துடனும் இந்தியாவுடனும் வலுவான நெருக்கமும் பசிலுக்கு உண்டு. பசிலின்
இந்த முகத்தைக் கொண்டு அமெரிக்கா – மேற்குலக – இந்திய முகாமின் அழுத்தங்களை
தணிக்க அரசு முயற்சிக்கின்றது. இதனால் பசில் ஒரு வகையில் மொட்டு அரசின்
மீட்பராகக் கருதப்படுகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்தும் பாராளுமன்ற தேர்தல்
வெற்றியைத் தொடர்ந்தும் பெருந்தேசிய வாத இனவாத முகத்துடன் மட்டும் ஆட்சியை
நடத்தலாமென ஜனாதிபதியும்ரூபவ் பிரதமரும் நினைத்திருந்தனர். அதற்கேற்ப
பெருந்தேசியவாதத்தை திருப்திப்படுத்துவதிலும் அரசாங்க நிறுவனங்களை
இராணுவமயப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியிருந்தனர். ஆனால் இருவருக்கும் அந்த
நகர்வு படு தோல்வியில் முடிந்தது. உலகம் இலங்கைத்தீவிற்குள் தான் இருக்கிறது என
அவர்கள் கருதியிருந்தனர். தற்போது யதார்த்தம் உலகத்திற்குள் தான் இலங்கைத்தீவு
இருக்கிறது. என்பதை உறைக்கத்தக்க வகையில் நினைவூட்டி இருக்கின்றது. தற்போது
இதிலிருந்து மீள்வதற்கு பசில் ராஜபக்சவிடம் இருவரும் சரணடைந்துள்ளனர்
அரசைப் பொறுத்தவரை மூன்று நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி
இருக்கிறது. அதில் ஒன்று மேற்குலக – அமெரிக்க – இந்திய அணியுடன் மோத
வேண்டி இருப்பதாகும். இலங்கைத்தீவில் சீனாவின் அதிகரித்த செல்வாக்கும்
கோத்தபாய அரசாங்கம் அதற்கு துணை போவதுமே காரணங்களாகும். இது வரை மென்
அழுத்தத்தை மட்டும் பிரயோகித்து வந்த மேற்குலக – அமெரிக்க – இந்திய அணி
தற்போது சற்று வன் அமுத்தத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. கனடா
ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் இன அழிப்பு நினைவு
வாரத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைரூபவ் அமெரிக்க காங்கிரசில் தமிழருக்கு
சார்பான பிரேரணை கொண்டு வரப்பட்டமை ஐரோப்பிய யூனியன் பு.ளு. பிளஸ்
சலுகையை நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியமை போன்றன இம் மோதலின்

2

வெளிப்பாடுகளே ஆகும் துறைமுக நகர்ச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதைத்
தொடர்ந்தே இந்த அணி சற்று வன் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது.
இரண்டாவது கொழும்பு துறைமுக நகர்ச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை
பெரும்தேசியவாதிகளை திருப்திப்படுத்தாமை ஆகும். துறைமுக நகர் மூலம் இலங்கையின்
ஒரு பிரதேசம் சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது என்றே பெரும் தேசிய
வாதிகள் கருதுகின்றனர். இதனால் இலங்கையின் இறைமை பறிபோய்விட்டது என்று
நினைக்கின்றனர். கோத்தபாய தரப்பு பெரும் வெற்றியீட்டியமைக்கு பெரும்
தேசிய வாதிகளின் ஆதரவே பிரதான காரணமாகும். இது ஏறத்தாழ 1956 ம் ஆண்டு
ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்காவிற்கு வழங்கிய ஆதரவை ஒத்ததாகும். பெரும் தேசிய
வாதிகளிடம் ஆதரவு பெற்று அரசாங்கத்தை அமைத்தால் அவ் அரசாங்கம் பெரும்
தேசிய வாதிகளுக்கு தொடர்ந்து தீனி போட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல்
அவர்களுக்கு கோபம் வந்து விடும். ஆனால் அரசாங்கம் பெருந்தேசிய வாதிகளை
மட்டுமல்ல சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்த வேண்டி இருப்பதனால் ஒரு எல்லைக்கு
மேல் பெரும் தேசிய வாதிகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது.
பண்டாரநாயக்க இவ் விருப்பங்களை நிறைவேற்றாததால் ஆட்சிக்கு வந்து 3
வருடங்களிலேயே 1959 ம் ஆண்டு பௌத்த பிக்கு ஒருவரினால் சுட்டுக்
கொல்லப்பட்டார். கோத்தபாய அரசாங்கத்திற்கு ஆட்சிக்கு வந்து ஒரு
வருடத்திற்குள்ளேயே நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
மூன்றாவது சிங்கள லிபரல்களின் எதிர்ப்பாகும். அரசாங்கம்ரூபவ் அரசாங்க
நிறுவனங்களை இராணுவ மயப்படுத்த முயற்சிக்கின்றமை கொரோனாவை ஒடுக்கு
முறைக்கருவியாகப் பயன்படுத்துகின்றமை சிங்கள லிபரல்களிடம் கடும் கோபத்தை
உருவாக்கியுள்ளது. அவர்கள் தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இதற்கு
முகம் கொடுக்க முடியாமல் அரசாங்கம் திணறிக்கொண்டிருக்கின்றது. அதுவும்
ஆசிரியர்; சமூகத்தில் கைவைத்ததினால் நாடு முழுவதிலுமிருந்து ஆசிரியர் சமூகம்
எதிர்த்துக் கிளம்பியுள்ளது.
பசில் ராஜபக்சவிற்கு லிபரல் முகத்துடன் சிறந்த ஒழுங்கமைப்பாளர் என்ற
பெயரும் உண்டு. மொட்டுக் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கு
அளப்பரியது. இவர் முதலில் தனது லிபரல் முகத்தை செயற்பாட்டுத்தளத்திற்கு
கொண்டுவர முயற்சிக்கின்றார். இதன் அடிப்படையில் மேற்குலக – அமெரிக்க –
இந்திய அணியின் கோபத்தை தணிக்க முற்பட்டுள்ளார். இதற்காக ஒரே நாளிலே
அமெரிக்க தூதுவர் ரூபவ் இந்தியத்தூதுவர்ரூபவ் ஜேர்மனியின் தூதுவர்ரூபவ் சீனாவின்

3

தூதுவர்ரூபவ் ஐரோப்பிய யூனியன் தூதுவர் என்போரை சந்தித்துப்
பேசியிருக்கின்றார். கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 51மூ ஆன பங்கு
அமெரிக்க கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. தவிர திருக்கோணமலைத்துறைமுகம் 5 வருட
குத்தகை அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள்
வந்துள்ளன. இந்தியாவுக்கு திருகோணமலை எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில்
பங்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழங்கல்கள் மேற்குலக – அமெரிக்க – இந்திய
அணியை திருப்திப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எனினும் அந்த அணியுடனான மோதலை சற்றுத் தணிக்கச் செய்துள்ளது எனக் கூறலாம்.
தற்போது இந்த அணியின் நிலை தங்களை ஒடுக்காமல் சீனாவிற்கு இடம் கொடுத்தது
போல தங்களுக்கும் தர வேண்டும் என்பதே!
இரண்டாம் கட்டத்தில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரச் சரிவை சரிப்படுத்த
பசில் இராஜபக்ச முயற்சிக்கலாம். இவ் விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை அணுக
முற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. தற்போதைய அரசிற்குள்ள
பிரச்சினை இறக்குமதிச் செலவுக்கான நிதியையும் கடன் கொடுப்பதற்கான நிதியையும்
எவ்வாறு திரட்டுவது என்பதே. கடன் பெறுகைக்கு சீனாவை மட்டும் நம்பியிருக்க
முடியாது என்பது அரசாங்கத்திற்கு தெளிவாக தெரியத் தொடங்கியிருக்கிளது
மூன்றாம் கட்டத்தில் தமிழ்ரூபவ் முஸ்லீம்ரூபவ் மலையக தரப்புக்களை ஏதேவொரு
வகையில் அணைப்பதற்கு பசில்ராஜபக்ச முயற்சிக்கலாம். பல முஸ்லீம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவி தங்களுக்கு கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இங்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்
ரவூவ்ஹக்கிம் அமைச்சரவையில் சேர்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு.
ஏனையோர்கள் சேர முற்படலாம். இது முஸ்லீம் காங்கிரசினுள் பிளவினை
ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மலையக்த் தரப்பில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன்
அமைச்சரவையில் சேருவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. ஐக்கிய தேசியக்கட்சிக்கு
சார்பான கொழும்பு அரசியல் தளத்தில் நின்று கொண்டு அமைச்சரவையில் சேர
அவரால் முடியாது. ஏனையவர்கள் அரசாங்கம் பலவீனமாகிக் கொண்;டிருப்பதனால்
அமைச்சரவையில் சேருவதற்கு தயக்கத்தையே காட்டுவர்
தழித்தரப்பைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு தொடர்பாக பச்சைக் கொடி
காட்டினால் ஒழிய அவர்களைத் திருப்திப்படுத்துவது கடினம். ஆனால் அரசியல் தீர்வை
வழங்கும் நிலையில் கோத்தபாய அரசாங்கம் இல்லை. எனினும் அரசியல் கைதிகள்

4

விடுதலைரூபவ் பறிக்கப்பட்ட காணிகளை வழங்குதல்ரூபவ் ஆக்கிரமிப்புக்களைநிறுத்துதல்
போன்றவற்றில் நெகிழ்ச்சியைக்காட்ட முற்படலாம்.
பசில் இராஜபக்ச இவ்வாறான அணுகுமுறைகளுடன் நகர முற்பட்டாலும் அவருக்குப்
பல சவால்களும் இருக்கின்றன. இவர் நினைத்தாலும் சீனாவின் செல்வாக்கை கீழ் இறக்க
முடியாமல் பொருளாதாரச் சரிவைத் தடுப்பதில் ஒரு எல்லைக்கு மேல் நகர முடியாமை
பெருந்தேசிய வாதிகளை போதியளவு திருப்திப்படுத்த முடியாமைரூபவ் தமிழ் முஸ்லீம்
மலையக்தரப்புக்களை அவர்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப திருப்திப்படுத்த முடியாமை.
உட்கட்சிப்பிரச்சினைகள் என்பன சவால்களாக மேல் எழலாம்.
உட்கட்சிப்பிரச்சினையில் ஏனைய சிறு கட்சிகளுடன் முரண்படுவது மொட்டுக்கட்சியின்
தலைமைக்கு பெரிய பாதிப்பைக் கொண்டு வராது. ஏனெனில் இக்கட்சிகளுக்கு தனியான
இருப்பு இல்லை ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடனான முரண்பாடு நிச்சயமாக
கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இக்கட்சிக்கு பலவீனமான நிலையில்
இருந்தாலும் தனியான இருப்பு இருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ்த் தரப்பு என்ன செய்யலாம் என்ற கேள்வி
எழுகின்றது. இன்று தமிழ்த் தரப்புடன் நெகிழ்ச்சியாக நடந்துகொள்ள வேண்டிய
உள்நாட்டு சர்வதேசத் தேவை சிங்கள் தேசத்தின் இரண்டு அணிகளுக்கும் உண்டு. இந்த
வாய்ப்பை கவனமாகப் பயன்படுத்துவதற்கு தமிழ்த்தரப்பு தயங்கக் கூடாது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம்
கொடுக்கின்றனர். அடிப்படைப்பிரச்சினை இன அழிப்புக்கான நீதிப்
பிரச்சினைரூபவ் இயல்புநிலையைக் கொண்டுவருதல் பிரச்சினைரூபவ் ஆக்கிரமிப்பு
பிரச்சினைரூபவ் அன்றாடப் பிரச்சினை என்பவையே இவையாகும். இவற்றில் முதல் இரண்டு
பிரச்சினைகளும் நீண்டகால இலக்குகளாகவும் ஏனையவை குறுகியகால இலக்குகளாகவும்
உள்ளன. குறைந்த பட்சம் நீண்டகால இலக்குகளான உத்தரவாதங்களைப் பெற்றுக்கொண்டு
குறுகியகால இலக்குகளை அடைந்துகொள்வதற்கு முயற்சிப்பது இன்றைய நிலையில்
ஆரோக்கியமானதாக இருக்கும். குறுகியகால இலக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு
தென்னிலங்கையின் இரண்டு அணிகளுமே பெரியளவிற்கு எதிர்ப்பைத்
தெரிவிக்கப்போவதில்லை.
சமூக நீதிக்கான தேசிய அமைப்பு கருஜயசூரியா தலைமையில்
எதிர்க்கட்சிகளின் மாநாட்டை நடாத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த
எதிர்ப்பை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காகவே இது கூட்டப்பட்டது. இதில்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்ட சுமந்திரன்

5

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இல்லாமல் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து
செயற்படுவதிலும் பயனில்லை எனக் கூறியிருக்கிறார். இது சரியான
கருத்தேயாகும். அரசியல் தீர்வு விவகாரத்துடன் ஏனைய விவகாரங்களையும்
சுமந்திரன் முன்வைத்திருக்க வேண்டும். பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னர்
எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும்
படி கேட்டிருக்க வேண்டும். சுமந்திரன் இவை பற்றி பெரிதாக எதுவும் கூறவில்லை.
வருங்காலத்திலாவது எதிர்க்கட்சிகளின் அணி செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலை
உருவாக்கும் மேற்கூறிய ஐந்து விவகாரங்களையும் இணைக்கும்படி கேட்க வேண்டும்.
அடிப்படைப்பிரச்சினையிலும் பொறுப்புக்கூறல் பிரச்சினையிலும் நிகழ்ச்சி
நிரலுடன் கூடிய கால அட்டவணை ஒன்று தயாரிக்கப்டல் வேண்டும் எனவும் ஏனைய
ஆக்கிரமிப்பு பிரச்சினை ரூபவ் இயல்பு நிலையை கொண்டு வருதல் பிரச்சினை ரூபவ்
அன்றாடப்பிரச்சினை என்பவற்றில் உடனடியாக தீர்வுகள் காணப்பட வேண்டும்
என்பதும் அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
அதேவேளை அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் சார்பாக நேரடியாகவும்
அழத்தங்களைக் கொடுக்க வேண்டும். இன்னோர் பக்கத்தில் சர்வதேச பிராந்திய
சக்திகளுக்கூடாகவும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று
பக்கங்களிலிருந்து அழுத்தங்கள் வரும்போது அவற்றை சாதகமாக பரிசீலிக்காமல்
இருக்க அரசாங்கத்தினால் முடியாது.
தமிழ்த்தரப்பு பிரதிநிதித்துவம் இல்லாத எதிர்க்கட்சிகளின் அணி பெரிதாக
சோபிக்காது. அதேநேரம் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு
தமிழ்த்தரப்புடன் நெகிழ்ச்சியாக நடந்துகொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு
இருக்கின்றது.
எனவே இந்த சந்தர்ப்பத்தை சரியாகப்பயன்படுத்தக்கூடிய மூலோபாயங்களையும்
தந்திரோபாயங்களையும் தமிழ்த்தரப்பு உடனடியாக வகுத்துக் கொள்வது அவசியமானது.
தென்னிலங்கையின் இரு பிரதான அணிகளையும் பொறுத்தவரை அவசரப்பட்டு ஒரு
பக்கச்சார்பு நிலை எடுப்பது ஆரோக்கியமானதல்ல இரு தரப்புக்கும் சம தூரத்தில்
நின்று கொண்டு இரு அணிகளையும் எப்படிக் கையாள்வது என சிந்திப்பதே
ஆரோக்கியமானது.

Recommended For You

About the Author: Editor Elukainews