வீடு புகுந்த கொள்ளை கும்பல் கணவன், மனைவி மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளை..!

அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன், மனைவியை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன் மீது வாளால் வெட்டியுள்ளது.

பின்னர் மனைவியை உலக்கையால் தாக்கிய நிலையில் குழந்தைகள் சத்தமிட்டதை அவதானித்த அயலவர்கள் கூடியதை தொடர்ந்து கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

பின்னர் படுகாயமடைந்த கணவன், மனைவி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews