யாழ்.கோப்பாயில் ஓரு நாளில் 7 போிடம் கத்திமுனையில் வழிப்பறி..! பாதிக்கப்பட்ட 6 பேர் இ.போ.ச ஊழியர்கள், பொலிஸார் அசமந்தம் என சாடல்.. |

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் அதிகாலை கத்திமுனையில் சுமார் 7 போிடம் வழிப்பறி கொள்ளை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அக்கறையற்றிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்றய தினம் அதிகாலை 4 மணியை அண்மித்த நேரத்தில் சுமார் 7 போிடம் கத்திமுனையில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. அதில் 6 பேர் இ.போ.ச ஊழியர்கள் எனவும், மற்றொருவர் பத்திரிகை விநியோகஸ்த்தர் எனவும் கூறப்படுகின்றது.

7 போிடமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையிலான பணம் மற்றும் தொலைபேசிகளை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துள்ளனர். முகமூடி மற்றும் தொப்பி அணிந்தபடி வீதியால் செல்பவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட வழிப்பறிக் கும்பல்,

தங்களை பொலிஸார் என கூறுவதுடன், அடுத்த நிமிடம் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி கொள்ளையடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இவ்வாறான வழிப்பறி கொள்ளை சம்பவம் கோப்பாய் பகுதியில் அதிகரித்திருக்கும் நிலையில்,

கோப்பாய் பொலிஸார் இது குறித்து நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews