அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம்’ எனும் தொனிப்பொருளில் நடை பயணம்.

அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம் ‘ எனும் தொனிப்பொருளில் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் எமது ஊரை ,நாட்டை மீட்டெடுக்க அமைதியான ஜனநாயகத்திற்கான நியாய பயணத்தில் அகிம்சையே வெல்லும் நடைப்பயணமும், மௌன பிராத்தனை நிகழ்வானது மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து தொடர்ச்சியாக மட்டக்களப்பு நகர் கல்லடி புளியடிக்குடா செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வரை இன்று முன்னெடுக்கப்பட்டது.

அகிம்சையே வெல்லும் ஜனநாயகத்திற்கான நியாய பயண நிகழ்வின் இன்றைய 7ஆம் நாள் நிகழ்வில் புள்ளிகள் போடுகிறோம் புள்ளிகள் கோலங்கள் ஆவதுண்டு ,கடந்த கால இருளை மறவாத விழிகளுடன் எங்கள் பயணம் ஆரம்பம் போன்ற பல வாசகங்கள் மகாத்மா காந்தி பூங்கா வளாக மரக்கன்றுகளில் தொங்கவிடப்பட்டிருந்தன.

இதேவேளை மே 18 விசேட தினத்தை நினைவுகூரும் வகையில் மௌன பிராத்தனை இடம்பெற்றதுடன் பொதுமக்களுக்கு கஞ்சி பரிமாறப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews