1,600 கோடி ரூபாய் வழங்குகிறது சீனா!

இலங்கைக்கு 30 கோடி யுவான் – நம் நாட்டு மதிப்பில் சுமார் 1600 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் அண்மையில் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த நிதியுதவி, அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews