காட்டு யானைகளால் 5 ஏக்கர் மேட்டு நில பயிர்கள் அழிப்பு.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கொழுந்துபுலவு பகுதியில் 02.05.2022 இரவு 3 மூன்று காட்டு யானைகள் இவ்வாறு பயிர்களை அழத்துள்ளன.
வாழ்வாதாரத்திற்காக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு இருந்த மூன்று ஏக்கர் பூசனி செய்கையை முற்று முழுதாக அளித்துள்ளன. இதேவேளை ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மரவள்ளிகளையும் துவம்சம் செய்துள்ளதுடன், 500 வர்த்தக பழ செய்கையினையும், 30ற்கும் மேற்பட்ட இரண்டு வருட கால தென்னைகளையும் அழித்து துவம்சம் செய்துள்ளன.
அத்துடன் மற்றுமொரு வீட்டுத்தோட்டத்திலுள்ள வாழை மரங்களையும் அழித்துள்ளதுடன், நிலக்கடலை பயிரையும் மிதித்து சொதப்படுத்தியுள்ளன.
தமது பகுதிகளில் இதுவரை காலமும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இல்லாத நிலையில் அண்மை காலமாக தொடர்ச்சியாக அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
கடந்த  மாதமும் அயல் கிராமமான மயில்கனபுரம் பகுதியிலும் தென்னை மரங்களை அழித்ததாகவும் தொடர்ச்சியாக தமது பகுதியில் வந்து பயிர்களை அழித்துள்ளமையால் மக்கள் மத்தியில் காட்டுயினைகளினால் மிக அச்சநிலை  தொன்றியுள்ளதாக தெரிவாத்துள்ளனர்.
இது தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எமது பாதுகாப்பினை உதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்ற அதேவேளை,  தமது பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள்  வருவதன்காரணமாக இப்பகுதியில் மின்சார வேலி அமைத்து தரவேண்டும் எனவும் வேண்டுகை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews