இ தொ காவின் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகனை நியமிக்க முடியுமா? ஊடகவியலாளர் கேள்வி. –

இதொகாவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகன் ஒருவரை நியமிக்க முடியுமா?சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜீவன் தொண்டமானின் நேற்றைய உரை தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா
தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரை மேடையில் வைத்துக்கொண்டு , ராஜபக்ஸவுடனான உறவு இன்றுடன் முடிந்துபோவதாக இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் அறிவித்ததன் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியில் நீடிக்கமாட்டார் என்பது நேரடியாகவே சொல்லப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கை காலத்தை கூட வயதாக கொண்டிராத ஜீவன் தொண்டமான் , அரசியலில் கற்றுக்குட்டியாக இருந்து இப்போது பேசுவது வெறும் உணர்ச்சியை மக்களிடையே தூண்டவே… வேறு ஒன்றுமில்லை..

ஆறுமுகம் தொண்டமான் மரணித்த கையோடு , ஜீவன் தொண்டமான் இ.தொ.கா தலைமைப் பதவி ஏற்பதற்கும் , தேர்தலில் போட்டியிட வைப்பதற்கும் உதவியவர் மஹிந்த.. (தேவையெனில் டீட்டெய்லாக எழுதலாம்…)

இப்போதும் ராஜபக்சக்களை விட்டு விலகுவது அவர்களின் ( காங்கிரஸின் )அரசியலாக இருக்கலாம். ஆனால் அதற்கு சொல்லும் காரணங்களைப் பார்த்தீர்களா?

‘பெருந்தோட்ட அமைச்சு அல்லது கால்நடை அமைச்சு மட்டும்தான் மலையகத்திற்கு வரவேண்டுமா ?ஒரு கல்வியமைச்சு வரக்கூடாதா? அல்லது பிரதமர் பதவியாவது வரக்கூடாதா ? என்று கேட்கிறார் ஜீவன்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், மகளிர் அணித்தலைவர் விஜி தொண்டமான்… கட்சிக்காக காலாகாலம் அடிமையாக இருக்கும் தொழிலாளி மகனுக்கு கட்சியில் மேற்படி மூன்று பதவிகளில் ஒரு பதவி வழங்க மேட்டுக்குடி மனது இடம் கொடுக்கவில்லை… இந்த கேட்டுக்கு பிரதமர் பதவி வேறு…

அண்மையில் நடந்த கட்சியின் தேசிய மாநாட்டில் யாராவது கட்சிக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த முத்து சிவலிங்கத்தை பற்றி பேசினார்களா ? அவரை எப்படியாவது அந்த மாநாட்டிற்கு அழைத்து வர முயற்சித்தவர்களை தடுத்தது யார்?

இதுதான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…

இன்றும் கூட ராஜபக்சக்களின் அதிகாரம் இல்லை என்றபோது , இரத்தம் குடித்த உண்ணிகள் வெளியேறுவதுபோல கழன்றிருக்கிறது காங்கிரஸ்..

15 வருடகால ராஜபக்சக்களின் நட்பில் அமைச்சுகளை வைத்திருந்த காங்கிரஸுக்கு , மலசலகூடம் இல்லாத லயன்கள் , நூலகம் இல்லாத பாடசாலைகள் இன்னமும் இருக்கின்றதென்பதாவது தெரியுமா?

பிரதமர் பதவி கேட்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.. கட்சியில் சகல அதிகாரங்களையும் கொண்ட பொதுச் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகன் ஒருவரை நியமிக்குமா காங்கிரஸ்?என கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews