80 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறி….! சம்பிக்க ரணவக்க.

இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில், 80 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (1) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர்,

நாட்டில் புள்ளிவிபர ரீதியில் எடுத்துக்கொண்டால் 80 இலட்சம் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 14 இலட்சம் பேர் அரச ஊழியர்கள். 26 இலட்சம் பேர் தனியார் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். ஏனையவர்கள் விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் என ஏனைய துறைகளைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த உழைக்கும் வர்க்கத்தினர் அண்மைக்காலமாக பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் கொரோனா பெருந்தொற்றுடன் ஏற்பட்ட பாதிப்பினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதேபோன்று விவசாயத் துறையும் பாதிக்கப்பட்டது.

அரச துறைகள் செயலிழந்தன. அரச அலுவலகங்கள் மூடப்பட்டன. தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews