மட்டு.ஓட்டமாவடி பிரதேச சபையின் திண்மக்கழிவகற்றும் சுகாதார தொழிலாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் திண்மக் கழிவகற்றும் சுகாதார தொழிலாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

தொழிலாளர்களின் உரிமைகள்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியும்,அவர்களின் அர்பணிப்பு மிக்க சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் தொழிலாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக பிரதேச சிவில் சமூக செயற்பாட்டாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடா கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் தாஹிர் மௌலவி ஓய்வு பெற்ற கல்வி மான்களான காதர்,ஹலீல் இபிரதேச சபை உறுப்பினர்களான ஜளபர்,யோகோஸ்வரன்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews