ராஜபக்சக்களின் முகப்புத்தகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தனது முகப்புத்தகத்தின் சுயவிபர புகைப்படத்தினை திடீரென மாற்றியுள்ளார்.

இவர்கள் தமது சுயவிபர புகைப்படத்தினை இலங்கையின் தேசிய கொடியுடன் இணைத்து புகைப்படத்தினை மாற்றியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அரசுக்கெதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் ராஜபக்சக்கள் தமது முகப்புத்தகத்தின் சுயவிபர புகைப்படத்தினை திடீரென மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews