மற்றுமொரு விலை அதிகரிப்பு.

மீண்டும் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை சுமார் ரூ.85,000 வரை அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி 254,500 ரூபாவாக இருந்த ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்போது 339,500 ரூபாயாக உள்ளது.

அதன்படி, முன்பு ரூ.1,040-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 மி.மீ இரும்பு கம்பி தற்போது ரூ.1,268-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட 12mm இரும்பு கம்பி தற்போது 1,887 ரூபாய்க்கும், 2,725 ரூபாய்க்கு விற்கப்பட்ட 16mm இரும்பு கம்பி 3200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் தற்போது இரும்பு கம்பிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews