யாழ்.வேலணையில் இரு பெண்கள் மீது கத்திக்குத்து! கத்தியால் குத்தியவர் தற்கொலைக்கு முயற்சி.. |

யாழ்.வேலணையில் குடும்ப தகராறினால் பெண்கள் இருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேலணை கிழக்கு பகுதியில் ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக,

குறித்த பெண் மீதும் அவருடைய மகள் மீதும் நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் அதிகளவு துாக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin