நல்லாட்சி காலத்தில் தமது நண்பரை பாதுகாக்கவே கூட்டமைப்பினர் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை! விக்னேஸ்வரன் எம்பி சாட்டை..

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அவரது வாசஸ்தலத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் போது அரசாங்கத்தோடு சேர்ந்து பயணித்த கூட்டமைப்பினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் செயற்பாட்டை அப்போதே நிறைவேற்றி இருக்கலாம் ஆனால் தமது நண்பருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதற்காக அதனை செயற்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். கடந்த 43 வருடமாக மக்களுக்கு எதிரான ஒரு சட்டமாகபயங்கரவாத தடைசட்டம் இருந்து வருகின்றது

எனினும் காலம் கடந்தும்கூட்மைப்பின் இளைஞர் அணி இதையாவது செய்து கொண்டு போகிறார்கள் என்பதை நாங்கள் நல்ல விதத்திலே பார்ப்போம் ஆனால் அரசியல் ரீதியாக பிழையான கருத்துக்களை முன்வைக்கவில்லை என்றார்.

Recommended For You

About the Author: admin