அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன…!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக்கியிருப்பதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கொள்கலன்களை விடுவித்துக்கொள்வதற்கு டொலர் இன்மை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த கொள்கலன்கள் இவ்வாறு தேங்கிக்கிடப்பதாக தெரிவிப்பக்கப்படுகிறது.

அரிசி, சீனி, கடலை, பருப்பு, காய்ந்த மிளகாய், கருவாடு, கொத்தமல்லி ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கறே இவ்வாறு தேங்கிக் கிடக்கின்றன என்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வோர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin