ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு ஒரு போலி காரணத்தை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். ரஷ்ய படையெடுப்பு நடந்தால் அதற்கான விளைவுகள் “கடுமையானதாகவும் விரைவானதாகவும்” இருக்கும் என்று எச்சரித்தார் கமலா ஹாரிஸ்.
ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்தில் யுக்ரேன் ஓர் அங்கமாக இருந்ததால் ரஷ்யாவுடன் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்தது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத போதியிலும் அந்த அமைப்புகளின் உறுப்பு நாடுகளுடன் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது.
ரஷ்யாவைப் பொறுத்தவரையில், யுக்ரேன் ராணுவ ஒத்துழைப்புக்கான கூட்டணியாக உள்ள நேட்டோவுடன் இணையக் கூடாது என விரும்புகிறது. அப்படி இணைந்தால் அது தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதுகிறது.