கல்வியே தமிழினத்தின் மிகப்பெரிய கொடை:சாள்ஸ் நிர்மலநாதன் –

கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை. எமது மாணவர்கள் அதனை திறம்பட செய்து வருகின்றனர். புலம்பெயர் தேசங்களில் உள்ள எமது உறவுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வன்னி மண் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 38 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் கலந்து கொண்டார்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்ட பின் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார்,மடு கல்வி வலய அதிகாரிகள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews