யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட போராட்டம் நிறைவு, சூப்பர் மடம் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது…!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சியின் சில மீனவர்கள் சங்க மீனவர்கள்  பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு காலை 7:00 மணிமுதல்  மேற்கொண்ட போராட்டம் பிற்பகல் 2:00 மணியுடன் நிறைவுற்றது.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து  மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திந்தனர்.
இதன்னால் பிரதேச செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் முடக்கப்பட்டிருந்தது.அதே வேளை
 யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியையும் மறித்து வீதியில் இந்திய மீனவர்களால் அறுத்து நாசமாக்ப்பட்ட வலைகளையும் வீதியில் போட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக  முடங்கியிருந்தததன் ட பாடசாலை மாணவர்கள் மாத்திரம் வீதியினால் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்த வேளை
பருத்தித்துறை சூப்பர் மடம் பகுதியில் 15 வடமராட்சிக்கு உட்பட்ட சங்கங்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாதன் யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பநாயகம், உட்பட்ட குழுவினரும், கடற்றொழில்  நீரியல் வளத்துறை உதவி பணிப்பாளர் திரு சுதாகரன், கடற்றொழில் பரிசோதகர் இராஜேந்தர் உட்பட்ட அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.
தமது ஆதரவை மீனவர்களுக்கு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிலையில் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான கடற்படை தளபதி, கரையோர பாதுகாப்புக்கு  பொறுப்பான  அதிகாரி யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரி உட்பட்ட பாதுகாப்பு தர்ப்புக்கள் சுப்பர்மடம் போராட்ட இடத்திற்கு வருகை தந்து போராட்டத்தை கைவிடுமாறும் தாம் எல்லை மீறிய இந்திய மீனவர் வருகையை முற்றுமுழுதாக கட்டுப்படுத்துவதாக தம்மை நம்புமாறும் தெரிவித்திருந்த  நிலையில் தமக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக மீனவர்கள் தெரிவித்திருந்தார் நிலையில் தம்மால் எழுத்து மூலம் தரமுடியாதென தெரிவித்த நிலையில் சமரச முயற்சி தோல்வியடைந்தது
இதே வேளை இன்றைய தினம் சூப்பர் மடம் போராட்டத்திற்க்கு ஆதரவாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு  உட்பட்ட பல சங்கங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் நேரடியாக தமது ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று இரவும் இப் போராட்டம் எந்தவித முடிவும் இன்றி தொடர்வதுடன் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் எவரும் கடந்த 30/01/2022 இலிருந்து கடல் தொழிலில் ஈடுபடாமல் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews