முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவிப்பு.

முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரான காண்டீபன் மற்றும் சட்டத்தரனி சுகாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற 13வது திருத்தத்திற்கு எதிரான வாகன ஊர்தி பிரசாரத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கோமாளிகளின் 13 ஆவது திருத்த நாடக நிகழ்ச்சி நிரலில், மக்களே நீங்கள் ஏமாற வேண்டாம். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் என்று கூறும் சிலர் இன்று 13ஐ கையிலே எடுத்து ஜனநாயகத்தைப் புதைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

அவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். இது முன்னணியின் போராட்டம் அல்ல. தமிழ் மக்களின் போராட்டம்.நாம் முதலமைச்சர் கதிரைக்கு ஆசைப்படவில்லை.

மக்களோடு மக்களாக நிற்கத் தான் நாம் விரும்புகின்றோம். 2013 ஆம் ஆண்டு தொடக்கம் முதலமைச்சர் கதிரையைத் தேய்த்து, ஒன்றுமே செய்யாத விக்னேஸ்வரன், மக்கள் விருப்பப்பட்டால் மீண்டும் வருவேன் எனக் கூறிக்கொண்டு இருக்கின்றார்.

நாடாளுமன்றில் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏனென்றால் அங்கே சிங்கள மக்கள் அதிகம் உள்ளனர். அதனால் அவர் பேச மாட்டார். முதல் பொங்கலுக்குத் தீர்வு வரும் எனச் சம்பந்தன் கூறிக்கொண்டிருந்தார்.

இப்போது சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூறுகின்றனர். இவர்களின் பம்பல் கதைகளுக்குப் பதில் சொல்வதற்கு நேரமில்லை.நாம் கொள்கை உடையவர்கள். இவர்களின் கேள்விகளுக்குப் பின்னர் பதில் கூறுகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews