வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்  முதல் தடவையாக பட்டப்போட்டி…..!

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்  முதல் தடவையாக பட்டப்போட்டி நேற்று நடாத்தப்பட்டுள்ளது.
 வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காட்டிலேயே இப் போட்டிகள் பிறபகல் 4:00 மணிக்கு  இடம் பெற்றன.
 வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும் பிரதேசத்திறக்கு வெளியே என இரு பிரிவுகளாக இப் போட்டிகள் இடம் பெற்றன.
 அருட்தந்தை வணக்கத்திற்க்குரிய ரமேஷ் அடிகளார்  தலமையில் கட்டைக்காடு  சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தால் நடாத்தப் பட்ட இப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன்,  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்த  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான ச.சுகிர்தன்,கேசவன் சயந்தன், மருதங்கேணி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட்ட அதிதிகளும் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்த  கட்டைக்காடு கிராமசேவகர் ச.காந்தரூபன், முன்னாள் கிராம சேவகர் வி.சுரேஸ்குமார் , முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி ச.திரவியராசா, கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ம.வசந்தகுமார்,கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் பி.சௌந்தர்ராஜன் உட்பட பலரும்  மங்கல விளக்குகளை ஏற்றியதுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
இப் போட்டிக்கு நடுவர்களாக வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி அதிபர் லயன் வே.பரமேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சி.பிரசாத், சமாதான நீதவான் திரு வசந்தகுமார், ஆகியோர் கடமை வகித்தனர்.
இப் போட்டிக்கு வடமராட்சி கிழக்கு, மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு வெளியேயிருந்தும் 30 பட்டங்கள் போட்டியில் பங்கு கொண்டன.
பரிசு தொகையாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட மற்றும் பிரதேசத்திற்க்கு வெளியே இருந்து பங்கு பற்றியவர்களுள்  முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் தெரிவு செய்யப்பட்துடன்   10 ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முதலாம் பரிசாக ரூபா 20000 மும் -இரண்டாம் பரிசாக ரூபா 15000 மும் மூன்றாம் பரிசாக ரூபா 10000மும் வழங்கிவைக்கப்பட்டன.
இதில் முதாலமிடத்தினை அன்னப்பட்சி பட்டமும், இரண்டாம் இடத்தினை litro gas லிற்றோ காஸ் பட்டமும் மூன்றாம் இடத்தினை சுழலும் பெட்டிப்பட்டமும் பெற்றிருந்தன.
இப் போட்டிகளை கண்டுகளிக்க பல இடகக்ஙளிலிருந்தும், சுமார் 5000 பேர் வரை கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews