ரணில் விக்கிரம சிங்கவிற்கு எம் கே சிவாஜிலிங்கம் சாட்டை…….!(முழு வீடியோ)

22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட தெரிவாகாத நிலையில் ரணிலின் கட்சி உள்ளது எனவும், சிறிய சிறிய கட்சிகள் போல சில ஆயிரம் வாக்குகளை எடுத்து தேசியப்பட்டியல் கிடைத்துள்ளதெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,தமிழ் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.

அவரது கட்சி அலுவலத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்தரிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தடவைகளும் நான் தோற்கடிக்கப்பட விடுதலைப் புலிகள்தான் காரணம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பல தடவைகள் இதற்கு நாம் பதில் தெரிவித்தாலும் அவருக்கு மீண்டும் பதில் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பற்றி பேசுவதற்கு தயாரா என்ற வாக்குறுதியை தர தயாரா என்ற கேள்வியுடன் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க சென்றேன்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க முடியாமல் போய்விட்டது. அவரின் பிரத்தியேக செயலாளருக்கும் வன்னியில் இருந்து அவசர செய்தி ஒன்று வந்துள்ளது என்பதை ரணிலிடம் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டேன்.

பதில் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் இருந்துவிட்டு நான் மீண்டும் தமிழ் செல்வனிடம் சென்று எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தேன்.

சாதகமான பதில் கிடைத்திருந்தால் பகிஸ்கரிப்பு திட்டத்தை மீள பெறுவோம் என்றும் விரும்பியவர்களுக்கு மக்கள் வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த அடிப்படையிலேயே 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளின்படி ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். யாழ்ப்பாணத்தின் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கவில்லை.

ரணில் விக்ரமசிங்கவை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்த பொழுது நான் அனுப்பிய செய்தி உங்களுக்குக் கிடைத்ததா என்று கேட்டேன். அப்போது ரணில் விக்ரமசிங்க, இந்த செய்தி கிடைத்தது.

ஆனாலும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் பேசிய போது கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம எவ்வாறான பதிலும் அனுப்ப தேவையில்லை என தெரிவித்ததால் அதனைத் தவிர்த்துக் கொண்டேன். ஆனால் இப்பொழுது அதனை செய்திருக்கலாம் என்று நினைக்கின்றேன் என்றார்.

22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட தெரிவாகாத நிலையில் ரணிலின் கட்சி உள்ளது. சிறிய சிறிய கட்சிகள் போல சில ஆயிரம் வாக்குகளை எடுத்து தேசியப்பட்டியல் கிடைத்துள்ளது.

நீங்கள் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் பொழுது சமஸ்டியை பற்றி விவாதிக்கத் தயார் என்றும் இல்லை என்றால் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறீர்களா என்ற கேள்வி எழுகிறது.

சர்வதேச இனப் படுகொலைகள் உட்பட நடந்த குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை சம்பந்தப்பட்ட போர்க்குற்றவாளிகள் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அதே போல நீதி கிடைக்கக் கூடிய வகையிலே ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பை சர்வதேச சமூகம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews