செயலகங்களில்10 வருடங்களுக்கு மேல் எந்தவொரு இடமாற்றமும் இல்லாமல் 26 அலுவலர்கள் ஒரே இடத்தில்..!

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் 10 வருடங்களை தாண்டியும் இடமாற்றம் பெறாமலுள்ள 26 அலுவலக உதவியாளர்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 3 பேர் 21 வருடங்கள், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஒருவர் 27 வருடங்கள், சங்கானை பிரதேச செயலகத்தில் ஒருவர் 22 வருடங்கள், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் ஒருவர் 22 வருடங்கள் பணியாற்றுகின்றார்கள்.

5 வருடங்களைத் தாண்டி 20 பேர் பிரதேச செயலகங்களில் பணியாற்றுகிறார்கள். கோப்பாய் பிரதேச செயலகத்தில் 5 பேர், நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒருவர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 4 பேர், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 4 பேர்,

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் 2 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 2 பேர், சங்கானை பிரதேச செயலகத்தில் ஒருவர், உடுவில் பிரதேச செயலகத்தில் ஒருவர் பணியாற்றுகின்றார்கள்.

இவர்களுக்கான இடமாற்றத்தை பொறுத்தவரையில் உள்ளக இடமாற்றத்தை செய்யும் அதிகாரம் மாவட்ட செயலகத்திற்கும் சுற்றறிக்கை தொடர்பான இடமாற்றத்தை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சும் செய்வதாக அறியக் கிடைத்த நிலையில்

இவர்களது இடமாற்றம் ஏன் ? செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பல உத்தியோகத்தர்கள் வெளி மாவட்டங்களில் பணியாற்றுகின்ற நிலையில் எப்படியாவது

தாமும் சொந்த இடத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ஆகவே அரச சேவையை வினைத்திறனாக நடாத்திச் செல்வதற்கு சுற்றறிக்கைகளின் பிரகாரம் உரிய வகையில் இட மாற்றங்களை மேற்கொள்வது

பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews