முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

குறிப்பாக மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந் நிலையில் இது தொடர்பில் அப்பகுதி தமிழ் மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து,... Read more »

யாழ்.அச்சுவேலியில் மதுபானம் பருக்கி சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவம், இருவர் கைது!

யாழ்.அச்சுவேலி – தென்மூலை பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும்... Read more »

இடிந்து விழுந்த ஊர்காவற்றுறை இறங்குதுறை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அசமந்தம், அந்தரிக்கும் மக்கள்..! |

யாழ்.காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் படகுகளுக்கான ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது. இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சேதமடைந்துள்ள பாதைப் படகு... Read more »

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை – மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன்

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை என கூறியுள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன். ஆனால் கடந்த வருடம் குறித்த கட்டிடத்தை தமக்கு வழங்குமாறு இராணுவ தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டமை உண்மை எனினும் அந்த கோரிக்கையை மாகாண... Read more »

யாழ்.தென்மராட்சியில் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய விவகாரம்! ஒருவர் பொலிஸாரிடம் சரண், மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தலைமறைவு

பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சகோதரனான மற்றொரு பொலிஸ்... Read more »

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலிருந்து பெண்ணிகளின் உள்ளாடைகளை திருடிவந்த ஆசாமி கைது!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலிருந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை பிடிக்கும்போது அவரிடம் மூன்று உள்ளாடைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சமீப காலமாக, பெண்கள் விடுதியில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல்போவது குறித்து... Read more »

கணவன் – மனைவி சண்டையை விசாரிக்க சென்ற பொலிஸார் மீது தாக்குதல்! முன்னாள் புலனாய்வு பிரிவு போராளியே தாக்கினாராம், இரு பொலிஸார் படுகாயம்

கணவன் – மனைவி இடையில் நடந்த தகராறு தொடர்பாக விசாரிக்க சென்றிருந்த பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார். இச்சம்பவம்... Read more »

இலங்கைக்கு நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!

இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபைக் கூட்டம் நேற்று வொஷிங்டனில் இடம்பெற்றது. இதன்போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   இதில் IMF நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF)... Read more »