வாகரையில் கஞ்சா, ஜஸ் போதைப் பொருள். பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.

மட்டக்களப்பு வாரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஜஸ் போதை பொருளுடன் நேற்று சனிக்கிழமை (5) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் காஸ்டபில் போதை பொருள் பாவனையில்... Read more »

மட்டு கல்குடாவில் திருட்டில் திடர்திருட்டு. சுள்ளான் திருட்டுக் கும்பல் தலைவர், 6 பேர் கைது.

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் பல வீடுகளை உடைத்து நீண்ட கலமாக திருட்டில் ஈடுபட்டுவந்த சுள்ளான் தீருட்டுக்கும்பல் தலைவர் உட்பட 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்ததுடன் திருடப்பட்ட  ரிவி, தண்ணீர் மோட்டர் 8 , சைக்கிள் 2,  தங்க... Read more »
Ad Widget

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலை மாணவி – இறுதிக்கிரியைகள் இன்று

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி ராமகிருஸ்ணன் சயகரியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நாவலப்பிட்டி நகரிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா – நொச்சுமோட்டை பகுதியில் நேற்று (05) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 23 வயதான ராமகிருஸ்ணன் சயகரி உயிரிழந்திருந்தார்.... Read more »

அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை

இலங்கையின் நாடாளுமன்றில் புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கூடுகின்றனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இந்த... Read more »

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(6) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடை எரிவாயு கொள்கலனின் விலை 200 முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட ஒரு தொகையினால் ... Read more »

பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பு. மீனவர்களுக்கு பெரிதும் பாதிப்பு. ஜெயசீலனால் மிரட்டலுக்கு உள்ளானதாக மீனவர்கள் முறைப்பாடு…!

பருத்தித்துறை துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டால் தாம் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு அதிகம் என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திடம் முறையிட்டுள்ளனர். குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் மயிலிட்டியை சேர்ந்த ஒரு தொழிலாளி கூட தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அது... Read more »

சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரர் கைது!

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தனுஷ்க... Read more »

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு – பவுசர் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

நாட்டில் நிலவும் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு திங்கட்கிழமை (07) முடிவுக்கு வரும் என்று இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள், தேவையான எரிபொருள் இருப்புகளை முற்பதிவு செய்யத் தவறியமையே பிரதான காரணம் எனவும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு என்றும்... Read more »

இலங்கையின் நடவடிக்கையை எதிர்க்கும் உலகின் பலம்பொருந்திய நாடுகள்

சீன போர் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இலங்கையின் நடவடிக்கைக்கு பலம்பொருந்திய நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. ஆழ் கடலில் சீன போர் கப்பல்களுக்கு இலங்கை எரிபொருள் விநியோகம் செய்வதனை இவ்வாறு இந்தியாவும் அமெரிக்காவும்... Read more »

மாவீரர் துயிலுமில்லங்களில் அத்துமீறிய அரசியல் கட்சி – ஏற்பாட்டுக்குழுவினர் கண்டனம்

யுத்த காலத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்மாதம் 25-27வரை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் திட்டமிட்டு தமது கட்சி அரசியலை வலிந்து துயிலுமில்லங்களுக்குள் புகுத்தும் அநாகரீகமான செயற்பாட்டை இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருவதாகவும், அச்செயற்பாட்டை மாவீரர்களின் பெற்றோர்களும், முன்னாள்... Read more »