பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பு. மீனவர்களுக்கு பெரிதும் பாதிப்பு. ஜெயசீலனால் மிரட்டலுக்கு உள்ளானதாக மீனவர்கள் முறைப்பாடு…!

பருத்தித்துறை துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டால் தாம் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு அதிகம் என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திடம் முறையிட்டுள்ளனர்.

குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் மயிலிட்டியை சேர்ந்த ஒரு தொழிலாளி கூட தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அது நல்லதொரு உதாரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் முதல் கொட்டடி, சுப்பர்மடம், உப்புபகுதி மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நேரடியாக சென்று கட்டறிந்தபோதே சுப்பர் மடம் மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தாம் பருத்தித்துறை துறை முகம் அமைப்பதற்க்கு அடிக்கல் நாட்டுவதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெறுவதாக அறிந்து எதிர்ப்பு தெரிவித்த போது தாம் எதிர்ப்பு தெரிவித்தபோது அப்போதைய பிரதேச செயலர் ஜயசீலன் மற்றும் பாதுகாப்பு தரப்பு தம்மை கடுமையாக அச்சுறுத்தியதாகவும், இதனால் தம்மால் தொடர்ந்தும் எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராட முடியாத நிலை இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததுடன்

தற்போது கூட பருத்தித்துறை துறைமுகத்தில் படகுகளை கட்டும் தென்னிலங்கை பகுதி மீனவர்கள் மகளிர் பாடசாலை என்றும் பாராது அநாகரிமாக நடந்து கொள்வதாகவும், பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டால் அருகிலுள்ள சுப்பர்மடம், கொட்டடி மீனவர்கள் தமது படகுகளை நிறுத்தி தொழிலிற்க்கு சென்று வர முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் குமார அதிகாரத்தில் உள்ள யாரோ ஒருவர் தமது தேவை கருதி பாரதூரமான விளைவுகளை கூட பாராமல் இத் திட்டங்களை நடைமுறை படுத்துகின்றார்கள் என்றும் மக்களிடம் கேள்விகள் கேட்பதில்லை, கருத்துக்களை அறிவதில்லை, அவர்களுடைய கோரிக்கைகளை கவனத்தில் கொள்வதில்லை, சூழல் மதிப்பீட்டு தாக்கங்கள் தொடர்பில் சரியான ஆய்வுகள் மேற்கொள்வதுல்லை என்றும் தெரிவித்ததுடன் மக்களுடன் தாம் என்றும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று பிற்கல் சுப்பர்மடம் மீனவர்களுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்க்கு இடையில் சுப்பர்மடம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் குமார, யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன், மன்னார் மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க இணைப்பாளர், யாழ் மாவட்ட இணைப்பாளர், நிர்வாகிகள், சுப்பர் மடம் மீனவர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin