கமல்ஹாசனை புகழ்ந்த அமெரிக்க நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல... Read more »

இஸ்லாமியரின் மக்காவில் தமிழிலும் சொற்பொழிவு!

இஸ்லாமியர்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான மக்காவில் இனி தமிழிலும் அரஃபா நாள் சொற்பொழிவு ஒலிபரப்பப்படவுள்ளது. இஸ்லாத்தின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பு ஏற்கனவே 10 மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழ் உட்பட 4 மொழிகளில் இனி சொற்பொழிவு மொழிபெயர்க்கப்பட்டு... Read more »

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்! உலக நாடுகளுக்கு தலிபான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  கடந்த ஆண்டு கைப்பற்றி தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளதுடன், பெண்களுக்கு எதிராக பல தடைகளை தொடர்ச்சியாக விதித்து ஆட்சியமைத்து வருகின்றனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள்... Read more »

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் நியமனம்

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி என்னும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக  கடின உழைப்பாளி என அழைக்கப்படும் இவர் பங்களாதேஷுக்கான இந்திய தூதராகவும் செயற்பட்டுள்ளார். 1992 இல் அரசு பணியில் இணைந்த இவர் உஸ்பெகிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகப்... Read more »

லிபியாவில் தீவிரமடைந்த போராட்டம்! போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்றம்

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது. லிபியா மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள... Read more »

உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா

உக்ரைன் மீது புடின் அணுகுண்டு வீசலாம் என்ற அச்சத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அணுக்கதிரியக்கத்தை உணரும் திறன் கொண்ட விமானங்களை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புடின் உக்ரைன் மீது ஒரு குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதத்தைப் பிரயோகிக்கக் கூடும் எனவும்... Read more »

நெதர்லாந்தில் சூறாவளி: சொத்துக்கள் பெரும் சேதம்! பலர் காயம்!

நெதர்லாந்தை தாக்கிய சூறாவளியால் குடியிருப்புகள், வளாகங்களின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. நேற்று முன் தினம் திங்கட்கிழமை பிற்பகல் வீசிய சூறாவளியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர் காயமடைந்தனர். துறைமுக நகரமான Zierikzeeயில் திடீரென கட்டுக்கடங்காத அளவில் சூறாவளி காற்று வீசியது. வணிக... Read more »

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. குரங்கம்மை வைரஸ் பரவலையடுத்து இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. பிரித்தானியா 800இற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று... Read more »

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்.!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் 19 குழந்தைகளை சுட்டுக் கொலை செய்தது அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்படி, 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனநல ஆலோசனைக்காகவும், பாடசாலைகளில் பாதுகாப்பை... Read more »

கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ... Read more »