மாணவர் விசா – பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட விசேட அறிவிப்பு.

மாணவர் விசா தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர் விசாக்களுக்கு முன்னுரிமை மற்றும் உயர் முன்னுரிமை விசாக்கள் கிடைப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில வாரங்களில் அதிக தேவையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,... Read more »

Dornier விமானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரினால் குறித்த விமானம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more »

மட்டக்களப்பில் கராத்தே போட்டியில் இருபத்து ஆறு பதக்கங்களை சுவீகரித்து சாதனை

மட்டக்களப்பு மாவட்ட கராத்தே போட்டியில் பெற்றி கராத்தே கழகம் 26 பதக்கங்களைப்பெற்று மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளதாக பெற்றி கராத்தே கழகத்தின் கராத்தே அணியின் தலைவர் ஆர்.கௌசீகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கராத்தே கழகங்களுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் அதில் பங்குபற்றிய வீரர்களை... Read more »

தாய்லாந்து அரசிடம் அனுமதி கோரிய கோட்டாபய!

தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த விகாரைகளுக்கு சென்று வழிபடுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தின் அனுமதியை கேட்டுள்ளார். எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல்... Read more »

இலங்கை அரசு நம்பிக்கைத் துரோகம்!

சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு,... Read more »

சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை!

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தடை செய்யப்பட்ட சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்களின் பெயர்கள் தற்போதைய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளன . அதன்படி அவுஸ்திரேலிய தமிழர் பேரவை – உலகத் தமிழர் பேரவை – உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு... Read more »

மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா.

துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் போக்கு தொடங்கியதில் இருந்தே பல்வேறு மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார... Read more »

ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டார்.

தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதேநேரம், பெண் கல்விக்கு ஆதரவாக செயல்பட்ட முக்கிய ஆப்கானிஸ்தான் மதகுரு கொல்லப்பட்டார்.ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி என்பவரே காபூலில் தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. குறித்த மதத் தலைவரை குறிவைத்து ஒரு செயற்கை பிளாஸ்டிக் கால் ஒன்றுக்குள் மறைத்து... Read more »

இலங்கை அரசியலில் விரைவான முன்னேற்றம்!ஜப்பான் பிரதமர் நம்பிக்கை

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த... Read more »

எச்சரிக்கையை மீறிய அமெரிக்கா – தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்த சீனா.

சீன விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்ததாக தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவான் பாதுகாப்பு அமைச்சகம் இதனை குறிப்பிட்டுள்ளது. சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் காலநிலை... Read more »